×

கொரோனா வைரசுக்கு தடுப்பூசி கண்டுபிடிப்பதற்கு குறைந்தது ஒரு வருடம் ஆகலாம் : கைவிரித்த உலக சுகாதார அமைப்பு

வாஷிங்டன் : வேகமாக பரவி வரும் கொரோனா வைரசுக்கு தடுப்பு ஊசி கண்டுபிடிப்பதற்கு குறைந்தது ஒரு வருடம் ஆகலாம் என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. கடந்த டிசம்பர் மாதம் சீனாவின் வுகான் நகரில் முதலில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ், தற்போது உலகம் முழுவதும் 210 நாடுகளை ஆட்டிப்படைத்து வருகிறது. கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1.26 லட்சத்தையும் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2 லட்சத்தையும் எட்டியுள்ளது.

கொரோனா வைரஸுக்கான  தடுப்பூசியை தயாரிக்கும் முயற்சியில் பல்வேறு நாடுகள் ஈடுபட்டுள்ளனர். ஆனால் இதுவரை இதற்கான சரியான மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. இந்நிலையில் கொரோனாவிற்கான தடுப்பூசி கண்டுபிடிக்க குறைந்தது ஒரு வருடம் ஆகும் என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து ஜெனிவாவில் செய்தியாளர்களிடம் பேசிய உலக சுகாதார அமைப்பின் செய்தி தொடர்பாளர் மார்க்ரெட் ஆரிப்,கொரோனா தடுப்பு ஊசியை கண்டுபிடிக்கும் சோதனை பல நாடுகளில் ஆய்வு கட்டத்திலேயே உள்ளது. இதனால் தடுப்பு ஊசியை கண்டுபிடிக்க குறைந்தது ஒரு வருடம் ஆகலாம். உலக அளவில் கொரோனா வைரஸ் 90 சதவீதம் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் பரவி உள்ளது.இத்தாலி, ஸ்பெயினில் புதிதாக பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை குறைந்து வந்தாலும் இங்கிலாந்து, துருக்கியில் கொரோனா வைரஸ் அதிவேகத்தில் பரவி வருகிறது,என கூறினார்.

Tags : World Health Organization ,The Abandoned World Health Organization , Coronavirus, virus, vaccine, at least, one year, World Health Organization
× RELATED 2027ம் ஆண்டுக்குள் முற்றிலும் ஒழித்து...